துருக்கியில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் கைது
உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு நிறுவனங்களின் மூன்று அதிகாரிகள் துருக்கிய(Turkey) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சதித்திட்டம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட நான்கு நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று இஸ்தான்புல்(Istanbul) அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவாக, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர், மற்றையவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் “நமது நாட்டில் செயல்படும் முக்கியமான பாதுகாப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகிக்கின்றனர்” என்று மேலதிக விபரங்கள் வழங்காமல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
AFP செய்தி நிறுவனத்தின்படி, வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பத்தில் சந்தேக நபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின்(United Arab Emirates) உளவுத்துறை சேவைகளுக்காகப் பணியாற்றியதாகக் தெரிவித்துள்ளது, பின்னர் அந்த அறிக்கை நீக்கப்பட்டுள்ளது.





