இலங்கையில் பேருந்து விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி
பிபிலை – மஹியங்கனை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த வேன் தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேகம பிரதேசத்தில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





