இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்
இத்தாலியின் க்ரோசெட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
க்ரோசெட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஆசிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் ஒன்பது இருக்கைகள் கொண்ட மினிபஸும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்று இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.





