சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் டயமார்ஃபின்(diamorphine), 30 கிராம் கோக்கைன்(cocaine), 250 கிராம் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் 500 கிராம் கஞ்சா(cannabis) ஆகியவற்றை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது வைத்திருத்தல் உள்ளிட்ட கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், மரண தண்டனையை நீக்குவது மிகவும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உள்துறை அமைச்சர் கே. சண்முகம்(K. Shanmugam) தெரிவித்துள்ளார்.




