வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்தில் சிக்கியதில் மூவர் பலி!

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஒற்றை இயந்திரம் கொண்ட அந்த விமானம் நேற்று மாலை 5 மணியளவில், மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது.

இதில் 3 பேர் உயிரிழந்தனர் என CNN செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. எனினும், அவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விவரமும் தெளிவாக தெரியவில்லை.

இந்த விபத்து, போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது.

அந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் செல்கின்றன. அந்த மின் இணைப்பை, மின்சார நிறுவனம் நிறுத்த வேண்டியுள்ளது. அதன்பின்னரே, விபத்து நடந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்க அணைக்க முடியும் மற்றும் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய முடியும் என பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!