கனடாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி – குழப்பத்தில் பொலிஸார்
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள் சந்தேகத்திற்கிடமான தீ விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த குடும்பம் கடந்த 7ஆம் திகதி ஒன்ராறியோவின் பிரம்டன் நகரில் வசித்து வந்த வீட்டில் இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீ அணைக்கப்பட்ட பின்னர், வீட்டிற்குள் மனித எச்சங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர், ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அந்த நேரத்தில் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும், அந்த எலும்புகள் தந்தை, தாய் மற்றும் மகளுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
51 வயதான ராஜீவ் வாரிகு, அவரது மனைவி ஷில்பா கோட்டா, 47 மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகு ஆகியோரே இந்த துரதிர்ஷ்டவசமான கதியை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு செய்திக்குறிப்பில், ஒன்ராறியோ பொலிசார் மூன்று குடும்ப உறுப்பினர்களின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஒட்டாவாவின் புறநகர்ப் பகுதியான பஹிவானில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் உலகில் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.