ஜார்க்கண்டில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் மூவர் மரணம்
ஜார்க்கண்ட்(Jharkhand) மாநிலம் ஹசாரிபாக்(Hazaribagh) மாவட்டத்தில் உள்ள பரா பஜார் ஓபி(Para Bazar Obi) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் ரஷிதா பர்வீன், நான்ஹி பர்வீன் மற்றும் சதாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு வெடிபொருள், பழைய வெடிகுண்டு அல்லது கைவிடப்பட்ட வெடிபொருள் புதர்களில் புதைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணியின் போது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள், நாய் படை, மற்றும் ஹசாரிபாக் காவல்துறையின் தொழில்நுட்பக் குழு ஆகியோர் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை நடந்து வருகின்றனர்.





