இந்தியா செய்தி

தெலுங்கானாவில் மின்னல் தாக்கி மூவர் பலி

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விகாராபாத் மாவட்டத்தின் யலால் மண்டலத்தில் இரண்டு கிராமங்களில் மழை பெய்து கொண்டிருந்த போது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

விவசாய நிலத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், மரத்தடியில் நின்றிருந்த ஒருவர் மற்றுமொரு மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 26 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பத்ராத்ரி கொத்தகுடெம், கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட்டை, சித்திப்பேட்டை, யாதாத்ரி புவங்கிரி, ரங்காரெட்டி, ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 KMPH) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD இன் வானிலை மையம் கணித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!