பிரான்சில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயம்
தென்கிழக்கு பிரெஞ்சு(France) நகரமான லியோனுக்கு(Lyon) அருகிலுள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த நேரத்தில் உள்ளூர்வாசிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
“வெடிப்பின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஆலையை வைத்திருக்கும் நோர்வே(Norwey) ரசாயன நிறுவனமான எல்கெம்(Elkem) குறிப்பிட்டுள்ளது.





