போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது – 500 மில்லியன் ரூபா பெறுமதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குஷ் ரக போதைப்பொருளின் நிறை 50 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 27 முதல் 31 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





