இலங்கையில் கோர விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் பலி
புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ, மையாவ, மட்டக் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், அவரது மகள் மற்றும் மற்றுமொரு சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)




