வடகொரியாவிற்கு எதிராக கூட்டிணைந்த மூன்று நாடுகள் : உலக நாடுகளுக்கும் அழைப்பு!
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சனிக்கிழமையன்று வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் வளர்ச்சியை நசுக்குவதற்கு வலுவான சர்வதேச உந்துதலையும், ஒப்புதலையும் கோரியுள்ளனர்.
வடகொரியா- ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் கவலைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தை விரிவுபடுத்துவதை முடுக்கிவிட்டு, அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் அணுசக்திக் கோட்பாட்டைப் பறைசாற்றியதன் மூலம், கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பிராந்தியத்தில் தங்கள் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் தெரிவுநிலையை அதிகரிப்பதன் மூலமும், அவர்களின் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை வலுப்படுத்துவதன் மூலமும் பதிலடி கொடுத்துள்ளன. இந்நிலையிலேயே மூன்று தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் சோ, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை சர்வதேச சமூகத்தின் கடுமையான அமலாக்கத்தை பாதுகாக்க மூன்று நாடுகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.