கலிபோர்னியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் உயிரிழப்பு!
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட் பால்டியில் ( Mount Baldy) இருந்து 03 மலையேற்ற வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
19 வயதான இளைஞர் ஒருவர் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதகமான வானிலை மீட்பு நடவடிக்கையில் சவாலாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் மிகவும் ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக அறியப்படும் மவுண்ட் பால்டி, சம்பவம் நடந்த நேரத்தில் பலத்த காற்றுடன், பனிபொழிவையும் கொண்டிருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





