6.6 மில்லியன் பெறுமதியான தங்க நாணயத்தை திருடிய மூவர் கைது
பண்டாரகம வ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து எலிசபெத் மகாராணியின் உருவம் பதித்த தங்க நாணயத்தை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்க நாணயத்தின் எடை 311 கிராம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிலியந்தலை, பாதுக்க மற்றும் சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்க நாணயத்தின் உரிமையாளரான 57 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தனது அவுஸ்திரியா கணவர் ஜேர்மனிக்கு சென்று கடந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கை திரும்பியதாகவும், குறித்த வெளிநாட்டவரால் இந்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் சமையலறை கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் இந்த திருட்டைச் செய்தது தெரியவந்தது. தங்க நாணயத்தின் பெறுமதி 6.6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.