இலங்கை

யாழ்.பேருந்துகளில் பயணிகளிடம் கைவரிசையை காட்டிய மூவர் கைது…!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று சந்தேகநபர்களை கைது செய்தனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த
24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் திருட்டுப்போன பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர்.

 

 

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்