சிங்கப்பூரில் அச்சுறுத்தும் பாதிப்பு – 13 பேர் மரணம்
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் பாதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்ற ஆண்டு முழுமைக்கும் பதிவான மொத்த டெங்குகாய்ச்சல் மரணங்களை விட அது ஒரு மடங்குக்கும் அதிகமாகும்.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு அந்தத் தகவலை வெளியிட்டது. ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 பேர் உயிரிழந்தனர்.
சென்ற ஆண்டு முழுமைக்கும் டெங்கிக் காய்ச்சல் தொடர்பான 6 மரணங்கள் பதிவாகின. 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 19 ஆகும்.
இவ்வாண்டு இதுவரை 10,100க்கும் அதிகமான டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இம்மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மட்டும் 236 டெங்கு சம்பவங்கள் பதிவாகின.
கடந்த ஆண்டைவிட அந்த எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 4 times, 1 visits today)