யாழில் தொடர்ந்து அச்சுறுத்தும் பாதிப்பு – தீவிர ஆராய்ச்சியில் அதிகாரிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவி வரும் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போது 70 நோயாளர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தொற்று நோயியல் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாண பிரதேசங்களில் தொடர்ந்தும் காய்ச்சலைக் கண்டறிவதற்காக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
காய்ச்சலுக்கு வடமாகாணத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, பல மாதிரிகளில் லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.