ஐரோப்பிய நாடொன்றில் அச்சுறுத்தும் வெப்பம் – வெப்பத்தை தானாகவே சீராக்கிக்கொள்ளும் வீடுகள்
பல்கேரியா, பால்கன் வட்டாரத்தைக் கடுமையான வெப்பம் சுட்டெரிப்பதனால் அடிக்கடி மாறும் வானிலையைத் தாங்கக்கூடிய வீடுகளைப் பழைமை, புதுமை இரண்டையும் சேர்த்து அமைக்க அங்குள்ள கட்டடக் கலைஞர்கள் தொடங்கியுள்ளனர் .
அந்த வீடுகள் வெப்பக்காப்புத் தன்மையுடையவைாகும். பல்கேரியாவில் இருக்கும் அந்த வீடுகள் சொந்தமாக உட்புற வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்ளும்.
அந்த வீடுகள் களிமண், மரக்கட்டை போன்றவற்றால் செய்யப்பட்டவையாகும். இந்த முயற்சிக்குக் Institute for Environmental Construction என்ற நிறுவனம் கைகொடுக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டட நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
வரலாறும் முன்னோர்களும் சொல்லிக்கொடுத்தவற்றை நவீன முறையில் இக்காலத்திற்கு ஏற்ற முறையில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிடுகிறது.
பசுமை முறைகளைப் பயன்படுத்தித் தங்கள் சுற்றுச்சூழலைச் சொந்தமாகவே மாற்றும் திறன்களைப் பிறருக்குக் கற்றுத்தருவது அதன் நோக்கமாகும். பசுமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும்படி இளையர்களை ஊக்குவிப்பதில் ஒரு முன்மாதிரியாக இருக்கவும் நிறுவனம் விரும்புகிறது.