இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 46,385 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,927 ஆகும்.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 11,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)