ஐரோப்பா

ஸ்டார்மருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்துக்கள் – Reform UK கட்சியின் உறுப்பினர் இடைநீக்கம்!

பிரித்தானியாவில் Reform UK கட்சியின் உறுப்பினர் டாம் பிக்கப் ( Tom Pickup) கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய இனப்படுகொலை மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிரான அச்சுறுத்தல்கள் கொண்ட  வாட்ஸ்அப் குழு தொடர்பாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் ஒரு அரசாங்க அமைச்சர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் டாம் பிக்கப் ( Tom Pickup) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Reform UK கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டாம் பிக்கப் ( Tom Pickup), இஸ்லாமிய படுகொலைகள் தொடர்பான விமர்சனங்களை மறுத்துள்ளார்.

அத்துடன் சில கருத்துக்களை நகைச்சுவையாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 2 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!