வீழ்ச்சியை சந்திக்கும் Threads – அதிர்ச்சியில் மார்க்
டுவிட்டர் செயலிக்குப் போட்டியாக வெளியிடப்பட்ட Threads செயலி தொடங்கிய நாள் முதலே அதிகப்படியான பயனர்கள் அதில் இணையத் தொடங்கியதால் அதன் நிறுவனர் மகிழ்ச்சியடைந்ததாக செய்தி வெளியானது.
தொடங்கிய மூன்று நாள்களிலேயே பத்து மில்லியன் பதிவிறக்கம் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பயனர்கள் அந்த செயலியில் இணைய ஆரம்பித்தனர். இதனால் எலான் மஸ்கின் சாபத்திற்கு உள்ளான Threads செயலி, தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
பயனர்களும் திரெட் செயலி தொடர்பான பல கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, Threads செயலியின் தினசரி பயனர் எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டது தெரியவந்தது. மேலும் Threads செயலியை பயன்படுத்துவோர் அதில் செலவிடும் நேரம் கடுமையாகக் குறைந்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, கடந்த ஜூலை 11,12 ஆம் திகதிகளில் Threads செயலியின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஜூலை 9ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது சுமார் 20% பயனர்கள் குறைந்துள்ளனர். தொடக்கத்தில் பயனர்கள் இதில் செலவழிக்கும் நேரம் 20 நிமிடங்களிலிருந்து தற்போது 10 நிமிடமாகக் குறைந்துள்ளது.