பொலிஸ் வன்முறைக்கு எதிராக லிஸ்பனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
கேப் வெர்டேவில் பிறந்த போர்ச்சுகீசிய குடியிருப்பாளரை ஒரு போலீஸ்காரர் சுட்டுக் கொன்றதற்குப் பல நாட்களுக்குப் பிறகு, போலீஸ் வன்முறையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் லிஸ்பல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமடோரா புறநகரில் 43 வயது சமையல்காரரான ஓடைர் மோனிஸ் மீது அக்டோபர் 21 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைநகரின் பல இனங்களின் புறநகர்ப் பகுதிகளில் வன்முறை வெடித்தது.
ஓடைருக்கு நீதி வழங்குங்கள் என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், எம்மைக் கொல்வதை நிறுத்துங்கள், கொலையாளி பொலிஸாராக இருக்கும்போது யாரை அழைப்பது போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்தனர்.





