அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நாடாளவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
வொஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடுகடத்தல், பணியாளர்கள் பணிநீக்கம், காசா மற்றும் யுக்ரைன் போர்கள் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் பதாகைகளை ஏந்தியவாறு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 4 times, 4 visits today)