கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தடுப்பூசி
கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சுமார் 5,000 மாணவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பி (Meningitis B) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
மேலும், கென்ட் முழுவதும் உள்ள வளாகங்களில் ஏற்கனவே 2,500 டோஸ் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக
பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.




