ஐரோப்பா

பிரித்தானியாவில் விறகடுப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு – NHS எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விறகு அடுப்புக்கள் மற்றும் திறந்த அடுப்புக்களின் காரணமாக ஆண்டிற்கு 2500 பேர் உயிரிழப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவற்றை தடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 54 மில்லியன் பவுண்ட்ஸை சேமிக்க முடியும் என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு £164 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திச் செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நிலக்கரிகளை  எரிப்பது காற்று மாசுப்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்  நுண்துகள்கள் நுரையீரலிலும் இரத்த ஓட்டத்திலும் ஆழமாக ஊடுருவும்போது’ இதயம் மற்றும் நுரையீரல் நோய் ஏற்படலாம் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

வீட்டில் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடானது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3,700 க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 1,500 ஆஸ்துமா நோயாளிகள் உருவாக வழிவகுப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் விறகுகளை எரிப்பவர்களில் 92 சதவீதத்தினர் ஏற்கனவே தங்கள் வீட்டை வெப்பப்படுத்த வேறு வழியைக் கொண்டுள்ளனர். இருப்பினும்  கடந்த மூன்று ஆண்டுகளில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்