Zaporizhzhia வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவிற்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்ய படையினர் தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதியில் இருந்து 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 660 குழந்தைகள் உள்ளடங்குவதுடன், அவர்கள் அசோவ் கடலின் கடற்கரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Zaporizhzhia பகுதி உக்ரைனின் எதிர் தாக்குதலைத் தொடங்கும் போது அது குறிவைக்கும் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு “கடுமையான அணுசக்தி விபத்து அச்சுறுத்தல்” குறித்து எச்சரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)