நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கோரி கோஷமெழுப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்!

நேபாளத்தில் ஒழிக்கப்பட்ட மன்னராட்சியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்றும், இந்து மதத்தை மீண்டும் அரசு மதமாக கொண்டு வர வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு நேபாள சுற்றுப்பயணத்திலிருந்து காத்மாண்டு வந்தபோது, ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் சுமார் 10,000 பேர் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை மறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜாவுக்காக அரச அரண்மனையை காலி செய்யுங்கள். ராஜா திரும்பி வாருங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள். எங்களுக்கு முடியாட்சி வேண்டும்” என்று மக்கள் கோஷமிட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான கலகப் பிரிவு போலீசார் போராட்டக்காரர்களை விமான நிலையத்திற்குள் நுழைவதைத் தடுத்தனர், எந்த வன்முறையும் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)