சூடானில் மண்ணில் புதையுண்ட ஆயிரக்கணக்கான மக்கள் – வெறுங் கைககளால் மண்ணை அகற்றம் மக்கள்!

சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை மீட்க அப்பகுதி மக்கள் வெறுங் கைகளை கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் உதவிக் குழு தெரிவித்துள்ளது.
“கருவிகள் அல்லது இயந்திரங்கள் இல்லாததால் மக்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை மீட்க கைகளால் தோண்டி வருகின்றனர்” என்று குழுவின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான துணை சூடான் இயக்குநர் பிரான்செஸ்கோ லானினோ கூறினார்.
எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் பகுதிக்குப் பொறுப்பான ஒரு ஆயுதக் குழுவிலிருந்து 1,000 பேர் வரையில் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிவில் அதிகாரசபையின் தலைவரின் கூற்றுப்படி, குறைந்தது 373 உடல்கள் மீட்கப்பட்டதாக சேவ் தி சில்ட்ரன் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)