உலகம் முழுவதிலும் இணைய செயலிழப்பை சந்தித்த ஆயிரக்கணக்கான மக்கள்!
உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இணைய செயலிழப்பை சந்தித்தாக இன்று முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறிப்பாக PayPal, ChatGPT, Letterboxd மற்றும் bet365 உள்ளிட்ட தளங்களில் சிக்கல்களை சந்தித்தாக தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்றான லீக் ஆஃப் லெஜண்ட்ஸும் (League of Legends) இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுட்டேஜ் டிராக்கர் டவுன்டெக்டரின் ( outage tracker Downdetector) கூற்றுப்படி காலை 11.40 மணியில் இருந்து 11,000 க்கும் மேற்பட்டோர் சிக்கல்களை முறைப்பாடு அளித்தாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
சில வலைத்தளங்களை அணுகும்போது, error code 500 என காண்பிக்கப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
பொறியாளர்கள் சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)




