நிவாரணப் பொருட்களைப் பெற முண்டியடித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள்

ரபாவில் நிவாரணப் பொருட்களைப் பெற ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் முண்டி அடித்துச் சென்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ரபாவில் நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பெட்டிகளைப் பெற்றவர்கள், அதில் இருந்த மாவு, எண்ணெய், தக்காளி சாஸ் உள்ளிட்ட பொருள்களைச் சரிபார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
காசா மனிதாபிமான அறக்கட்டளை சார்பில் சுமார் 8 ஆயிரம் நிவாரணப் பெட்டிகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் செல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்திருந்தது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக, நிவாரணப் பொருள்கள் விநியோகத்துக்கு இஸ்ரேல் அனுமதி அளித்ததையடுத்து, நிவாரணப் பொருள் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
(Visited 3 times, 1 visits today)