கிரீஸில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள் : அச்சத்தில் மக்கள்!

மத்திய கிரீஸில் உள்ள வோலோஸ் துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 100 டன்களுக்கும் அதிகமான செத்த மீன்கள் கரையொதுங்கியுள்ளன.
இறந்த நன்னீர் மீன்கள் ஏதென்ஸுக்கு வடக்கே 320 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள விரிகுடாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோலோஸின் சேம்பர் ஆஃப் காமர்ஸின் கூற்றுப்படி, கடந்த மூன்று நாட்களில் ஏராளமான மீன்கள் கரையொதுங்கியுள்ளதாகவும், இதனால் மீன்பிடி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக மீன்கள் இவ்வாறு கரையொதுங்குவதால் இயற்கை அனர்த்தம் ஏதும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 29 times, 1 visits today)