இலங்கை இன்று இப்படி இருப்பதற்கு யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கும் பொறுப்புள்ளது – நாமல்!

இலங்கை இன்று இந்த நிலையில் இருப்பதற்கு 75 வருடகால சாபம் என்று கூறுபவர்கள், 80களில் இடம்பெற்ற கலவரம், 60 ஆயிரம் இளைஞர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் 75 வருட சாபம் என்று பேசுபவர்கள், 88-89 இளைஞர்களை கொன்றவர்கள், 30 வருட கால யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் என அனைவரும் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)