திருகோணமலையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் விபரம்
திருகோணமலை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 313 பேர் பாதிப்ப!!
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 86 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
216 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் 25981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மூதூர் பிரதேசத்தில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 9530 குடும்பங்களைச் சேர்ந்த 31835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மூதூர் பிரதேசத்தில் அல் ஹிதாயா வித்தியாலயம், அரபா வித்தியாலயம், அல் ஹிலால் ஆண்கள் பாடசாலை மற்றும் பெண்கள் பாடசாலை ஆகிய இடங்களில் உள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





