உலகம் செய்தி

பிரேசிலில் மெத்தனால் விஷத்தால் மூன்றாவது நபர் உயிரிழப்பு

பிரேசிலின் சாஹோ பாலோவில் (São Paulo) மெத்தனால் விஷத்தால் 30 வயதுடைய புருனா அராஜோ டி சௌசா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த வாரம் வோட்கா (Vodka) பானம் அருந்திய பிறகு இரண்டு ஆண்கள் மெத்தனால் விஷத்தால் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து 11 வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 10,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கலப்படம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதுகாப்பு முத்திரைகள் அல்லது வரி முத்திரைகள் இல்லாத பானங்கள் அருந்துவதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெத்தனால் என்பது துப்புரவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை மரச்சாராயம் ஆகும்.

மெத்தனால் விஷத்தின் அறிகுறிகள் உடல்சோர்வு போலவே இருக்கும், அதாவது ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!