குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத பொருட்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டியவை!
நாம் வாங்கும் பொருட்கள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இது சரியான நடவடிக்கைதான் என்றாலும் அனைத்து பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது இல்லை.
அந்த வகையில் சில பொருட்களை குளிர்சாதனையைப் பெட்டியில் வைக்கும் போது அவற்றின் சுவை மாறுகிறது. வாங்கும்போதே இருந்த சுவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பிறகு சாப்பிடும்போது அந்த சுவை அப்படியே இருக்காது.
அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் எந்தெந்த பொருட்களை வைத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை என்னென்ன என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஏனென்றால் வாழைப்பழம் எப்பொழுதும் அறை வெப்ப நிலையில் இருக்க வேண்டும்.
மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு பிரட்டை குளிர்சாதன பெட்டியில் வைப்பது. பிரட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது விரைவில் கெட்டுப் போவதுடன் உலர்ந்ததாகவும் மாறுகிறது.
அதேபோல் தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. அதனை எப்போதும் வெளியில் மட்டுமே வைக்க வேண்டும் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் தக்காளியின் அமைப்பு மற்றும் சுவை மாறிவிடும்.
குளிர்சாதன பெட்டியில் தேனை வைத்தால் அது சுவையாற்றுவதாக மாறிவிடும் அதற்கு பதிலாக ஒரு கொள்கலனில் சேமித்து சூரிய ஒளி இல்லாத இருண்ட இடத்தில் வைக்கலாம்.
குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது ஏனெனில் இது எண்ணையை விரைவில் இறுக்க செய்யும் மற்றும் அதன் சுவையையும் மாற்றிவிடும்.
வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் ஒருபோதும் வைக்க கூடாது. குளிர்ந்த வெப்பநிலை மற்றும் குளிர்சாதனம் பெட்டியின் அதிக ஈரப்பதம் வெங்காயத்தை கெடுத்து விடும்