மூளையும் மனமும் இளமையாக இருக்க செய்ய வேண்டியவை
முதுமை நம் கதவை தட்டாமல் இருக்க உடல் ஆரோக்கியதோடு மன ஆரோக்கியமும் முக்கியம். அதற்கு நமது மூளையும் மனமும் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.
சுய அக்கறை என்பது நல்ல மன ஆரோக்கியத்திற்கு இது அவசியம். உங்கள் மனதையும், உடலையும், ஆன்மாவையும் வளர்க்க, உங்களுக்கு பிடித்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள்.
மனமும் உடலும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான உடல் பயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். உடற்பயிற்சி எண்டோர்பின் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. இது மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
மனிதர்களை சந்திப்பது நமது மன நலத்திற்கு இன்றியமையாதவை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடவும் முயற்சி செய்யுங்கள். உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்பகமான நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நிவாரணத்தையும் ஆதரவையும் அளிக்கும்.
இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் உங்கள் சுயமரியாதையையும் ஒட்டுமொத்த மனநலத்தையும் அதிகரிக்கும். இருப்பினும், யதார்த்தமான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை அமைப்பது அவசியம். சாதனை உணர்வு உங்கள் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
யோகா, தியானம் மற்றும் ஆழமான சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தை போக்கி நினைவாற்றலை பெருக்கும். உணர்ச்சிக் கட்டுப்பாட்டு திறனை மேம்படுத்தி, உங்கள் ஒட்டுமொத்த மன உறுதியை அதிகரிக்கும்.