திலகரத்ன டில்ஷானின் மகளுக்கு விளையாட வாய்ப்பு

கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார்.
இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.
16 வீரர்கள் கொண்ட இந்த அணியின் தலைவராக மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மும்முனை போட்டி அவுஸ்திரேலியாவில் வரும் 20ம் திகதி தொடங்க உள்ளது.
(Visited 21 times, 1 visits today)