வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான் – அவதானம்
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சில அத்தியாவசியமான அம்சங்களில் வைட்டமின் பி12 மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான இதயம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நம் உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
வைட்டமின் பி12 உடலில் பல முக்கிய செயல்முறைகளில் அங்கம் வகிக்கின்றது. சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி12
நம் உடல் வைட்டமின் பி12 ஐ உற்பத்தி செய்வதில்லை. நாம் உன்ணும் உணவின் மூலமாகத்தான் இதை பெற வேண்டும். உடலுக்கு அத்தியாவசிய வைட்டமினாக இருக்கும் இது, உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குதல், செல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் டிஎன்ஏவை உருவாக்குதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளை செய்கின்றது.
வைட்டமின் பி12 குறைபாடு
முக்கியமான பல பணிகளில் வைட்டமின் பி12 உதவியாக இருப்பதால், இதன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும். வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency) உள்ளவர்கள் அதை உடனடியாக சரி செய்வது அவசியம்.
நம் உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின்களும் தாதுக்களும் தேவை. வைட்டமின்கள் அல்லது தாதுக்களின் பற்றாக்குறை உடலில் ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வித நோய்கள் தோன்றத் தொடங்குகின்றன. குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் உடலை காப்பது மிக அவசியமாகும். உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டால் உடல் சில வகையான அறிகுறைகளை அளிக்கும். அந்த அறிகுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
– உடல் பலவீனம்
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், அதன் காரணமாக, உடலில் பலவீனம் மற்றும் பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது நரம்பு மண்டலத்தை பாதித்து, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
– வீக்கம், வாயு, மலச்சிக்கல்
உடலில் வைட்டமின் பி12 குறைவதால், இரைப்பை குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால். உடலில் உப்பசம், வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
– சருமத்தில் மாற்றம்
வைட்டமின் பி 12 இன் குறைபாடு ஏற்பட்டால், தோல் மஞ்சள் நிறமாக மாறும், இது ப்ரீமெச்யூர் இரத்த சிவப்பணுக்களால் ஏற்படுகிறது. தோல் மஞ்சள் நிறமாக இருந்தால், அது நிமோனியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
– ஒற்றைத் தலைவலி
வைட்டமின்பி12 குறைபாட்டால் உடலில் மைக்ரேன் பிரச்சனை அதாவது ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் ஏற்படலாம். இது தலையில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
– சோர்வு
வைட்டமின் பி12 குறைபாடு, உடலில் சோர்வு, ஆற்றல் இழப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தும். காரணம் இல்லாமல் உடலில் சோர்வு அதிகமாவது வைட்டமின் பி12 -இன் அறிகுறியாக இருக்கலாம்.