செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது – மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என அமெரிக்க மத்திய வங்கி வட்டி அறிவித்துள்ளது.

பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் தேவை இருந்தால் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தற்போது அதற்கான அவசியமில்லை எனவும் மத்திய வங்கியின் தலைவர் Jerome Powell கூறினார்.

டிரம்ப் நிர்வாகம் எப்படிப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்தவிருக்கிறது, அவற்றால் பணவீக்கம், வேலைகள், ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பார்க்க மத்திய வங்கி அதிகாரிகள் காத்திருப்பதாக பவல் கூறினார்.

வேலையின்மை விகிதம் கடந்த ஆறு மாதங்களாக நிலையாக இருப்பதாகவும் பணவீக்கம் குறையும் அறிகுறிகள் தெரிவதாகவும் அவர் கூறினார்.

2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பணவீக்கத்திற்குக் காரணம் மத்திய வங்கி பசுமை எரிசக்தி, பருவநிலை மாற்றம், பாலின சிந்தாந்தம் போன்றவற்றில் அதிகம் செலவிட்டதுதான் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.

ஜனாதிபதி டிரம்ப்பின் கருத்துகளுக்குப் பதிலளிக்க மறுத்த Jerome Powell, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப 2 விழுக்காடு வருடாந்திர பணவீக்கத்துடன் குறைந்த வேலையின்மை விகிதத்தைக் கட்டிக்காக்க மத்திய வங்கி முயற்சிசெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!