ஐக்கிய மக்கள் சக்தி அதனை மறந்து விட்டது!! ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கலந்துகொண்டதாக ‘டெய்லி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவரிடம் வினவிய போது, பாடகராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.
தான் ஒரு தொழில்முறை பாடகர் என்று கூறியுள்ள ரஞ்சன் ராமநாயக்க, எந்த அரசியல் கட்சியும் தன்னை பாடகராக அழைத்தால், அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும், இனி பாடி நடிக்க மட்டுமே முடியும் என்றும் அவர் இங்கு கூறியுள்ளார்.
சமூக உரிமைகளை மீளப் பெறுவதற்கு பாடுபடுவோம் என்று கூறிய ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அதனை மறந்துவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகைக்கு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)