செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: விவசாயிகளே இடைத்தரகர்களிடம் சிக்காதீர்!

“ மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.

உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லை பாதுகாக்கவும்.

இவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் K. Kanageswaran விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் Mannar District Secretariat இன்று (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

“ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரி பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு இருந்தால் தெரியப்படுத்தலாம்.” – என்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!