இன ரீதியான கலவரங்களை ஊக்குவித்தாரா அமைச்சர் கோர்டன் ?
வடக்கு அயர்லாந்து ஸ்டோர்மாண்டின் (Stormont) அமைச்சர் கோர்டன் லியோன்ஸ் (Gordon Lyons), தரநிலை கண்காணிப்பு அமைப்பின் கண்டுபிடிப்புகளுக்கு
எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் நடத்தை விதிகளை அவர் மீறியதாக அந்த அமைப்பு தீர்மானித்தது.
இனரீதியாக தூண்டப்பட்ட கலவரங்களின் போது, சில புலம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாதத்தில் லியோன்ஸ் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அந்த பதிவு, கலவரங்களின் போது பதற்றங்களை அதிகரித்திருக்கலாம் என குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைதியின்மைக்கும் அந்த பதிவு காரணமாக இருந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை லியோன்ஸ் மறுத்துள்ளார்.





