இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை
ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாயாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும் உள்ளது.
மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும் காணப்படுகின்றது.
இந்த விலைகள் இதே முறையில் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)