இலங்கையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம்! விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் 96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் குறைந்தது 02 மொழிகளை அறிந்திருக்க வேண்டும்.
போட்டிப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)