இலங்கை உள்ளுராட்சி தேர்தல் – இதுவரையில் 18 பேர் கைது!

கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் புகார்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியதாக 138 புகார்களும் பதிவாகியுள்ளன.
(Visited 3 times, 1 visits today)