ஜெர்மனி மக்களுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு
ஜெர்மனி நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழற்சங்கத்தின் ரயிவே துறையினர் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ஜெர்மனியின் தொடருந்து போக்குவரத்து பணியாளர்களின் மிக பெரிய தொழிற்சங்கமான இ வி ஜி தொழிற்சங்கமானது தங்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்து பணிபுறக்கணிப்பில் ஈடுப்படுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் பிரைம்கோட்டில் உள்ள நகர நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்தின் அடிப்படையில் இந்த பணி புறக்கணிப்பானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது டொச்சுபார் என்று சொல்லப்படுகின்ற இந்த தொடருந்து அமைப்புக்கு பொறுப்பான அமைப்பிற்கும் இந்த மிக பெரிய தொழிற்சங்கத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையானது நடைபெற்று வருகின்றது.
அதேவேளையில் குறித்த தினத்திலேயே இணக்கப்பாடு காணப்படாவிட்டால் மீண்டும் இந்த இ வி ஜி என்று சொல்லப்படுகின்ற தொழிற்சங்கமானது உடனடியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படக்கூடும்.
அதாவது வருகின்ற பின்ஸர் என்று சொல்லப்படுகின்ற இந்த விடுமுறை காலங்களின் பொழுது இவ்வகையான நடைமுறையை இந்த தொழிற்சங்கமானது மேற்கொள்ள கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரியவந்திருகின்றது.