இலங்கை

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய தேரர்..பொலிஸில் முறைப்பாடு செய்த எம்.பி

தமிழர் தரப்பால் இன்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், வழிபாட்டின் போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர் மலை சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி என தன்னை கூறிக்கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மத வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக் கடனை செய்யவிடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!