மங்களகரமாக வெளிநாட்டு மாணவர்களின் தலைக்கு எண்ணை வைத்த தேரர்
கராப்பிட்டி ஸ்ரீ சுனந்தராம விகாரையில் இன்று (15) காலை நடைபெற்ற தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வில் வெநாடுகளைச் சேர்ந்த 17 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இக்குழுவினர் மிகுந்த பக்தியுடன் சடங்கில் கலந்துகொண்டனர்.
கராப்பிட்டிய மானவேரிய ஸ்ரீ சுனந்தராம விஹாராதிபதி தம்மிக்க தேரரால் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு மங்களகரமான முறைப்படி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி உட்பட பெருந்தொகையான பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.
விஜேபால ஹெட்டியாராச்சி நட்புறவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.





