ஐரோப்பா

ஆசை காட்டி இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம்

பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக, ஆசை காட்டி வரவழைப்பதற்காக ஒரு அழகிய இளம்பெண் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட வழக்கில், அந்த இளம்பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.

பிரித்தானியரான Steven Graham (60)க்கும் தாய்லாந்து நாட்டவரான Ooy Taotaக்கும் பிறந்த மகன் பென் (16). கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பென் தெற்கு தாய்லாந்தில் உள்ள காடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.விசாரணையில், அவர் கடைசியாக, ஹம்சா (15) என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது. ஹம்சாவை விசாரிக்கலாம் என்றால் அவரையும் காணவில்லை.

இந்நிலையில், பென் மாயமான இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சந்தேகத்துக்குரியவகையில் சுற்றிக்கொண்டிருந்தது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது. அவரது பெயர் சைவாட் (44) குற்றத்தை முதலில் மறுத்த சைவாட், பின்னர் பென்னைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஆசை காட்டி பிரித்தானிய இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த அழகிய இளம்பெண்: சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம் | Uk Ben Taota Was Found Dead In Forest In Thailand

 

இதற்கிடையில், காணாமல்போன ஹம்சாவின் உடல் ஓரிடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெண்ணை ஆசை காட்டி காட்டுக்குள் கொண்டு வர ஹம்சா பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளதால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சைவாட்டிடம் ஹம்சா குறித்து விசாரித்தால், தான் பென்னை மட்டுமே கொலை செய்ததாகவும், ஹம்சா குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால், சைவாட் ஒரு பாலியல் குற்றவாளி என்பதால், ஹம்சா வன்புணரப்பட்டாரா என்பதை அறிவதற்காக, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்