கையடக்க தொலைபேசி தருவதாக கூறி அரச அதிகாரி செய்த மிக மோசமான செயல்
ராஜஸ்தானில் பொது சுகாதார பொறியியல் துறையின் காசாளரால் இளம் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17 வயது சிறுமி சில்மிஷம் செய்யப்பட்டதாகவும், 35 வயதான காசாளர், கையடக்கத் தொலைபேசியை இலவசமாக தருவதாகக் கூறி, காரில் அழைத்துச் சென்று மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் காசாளரைப் பிடித்து திணைக்களத்தின் பிரதான வாயிலுக்கு முன்னால் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அப்பகுதி மக்கள் தாக்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குறித்த சிறுமி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது தாயார் தினக்கூலி வேலைக்கு சென்றதாகவும், அவரது தந்தை ஜெய்ப்பூரில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புகாரின்படி, சந்தேக நபர் சுனில் குமார் ஜாங்கிட் தனது வீட்டிற்கு வந்து, மாநில அரசு இலவசமாக மொபைல் போன்களை வழங்குவதாகவும், திட்டத்தில் அவரது எண் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பின்னர் தொலைபேசி விரைவில் தீர்ந்துவிடும் என கூறி தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அவளை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வழியிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
தப்பிக்க முயன்றபோதும் அவர் கத்தியை காட்டி மிரட்டியதாக இளம்பெண் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.